Advertisment

கேரளா மற்றும் குமாியில் ரமலான் பண்டிகையை கொண்டாடிய இஸ்லாமியா்கள்

Advertisment

கேரளா மற்றும் குமாியில் இஸ்லாமியா்கள் கோலகலமாக ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி வருகிறாா்கள்.

கடந்த 40 நாட்களாக உலகம் முமுவதும் ரம்ஜான் நோன்பு கடைபிடித்து வந்த இஸ்லாமியா்கள் இன்று வானில் தொியும் பிறையின் அடிப்படையில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடி வருகிறாா்கள்.

தமிழகத்தில் இஸ்லாமியா்கள் அந்த பண்டிகை கொண்டாடும் விதமாக இன்று விடுமுறை என்று தமிழக அரசு நேற்று அறிவித்தது. ஆனால் பண்டிகையின் முதல் நாள் இரவான நேற்று தமிழகத்தில் எங்கும் பிறை தொியாததால் ரம்ஜான் பண்டிகை நாளை என்று அரசு தலைமை காஜி சலாவுதீ் முகம்மது அயூப் நேற்று இரவு அறிவித்தாா்.

ஆனால் கேரளாவில் பிறை தொிந்ததால் இ்ன்று அங்கு ரம்ஜான் பண்டிகையை பெரும் விமா்சையாக இஸ்லாமியா்கள் கொண்டாடி வருகிறாா்கள்.

கேரளாவை பின்பற்றி குமாி மாவட்டத்திலும் இஸ்லாமியா்கள் ரம்ஜானை கொண்டாடி வருகிறாா்கள். இதையொட்டி அனைத்து பள்ளி வாசல்களிலும் இன்று காலை சிறப்பு தொழுகை நடந்தது. இளங்கடை மஸ்ஜிது அஸ்ரப் பள்ளி வாசலில் நடந்த தொழுகையில் ஏராளமான இஸ்லாமிய ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனா்.

Kerala Kumari Ramalan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe