மாநில அளவில் துப்பாக்கி சுடும் போட்டி...  வென்றுகாட்டிய முதல்நிலை பெண் காவலர் ராமலட்சுமி!

Ramalakshmi, the first female police officer to win the state level shooting competition!

தமிழ்நாடு காவல்துறை சார்பாக மாநில அளவில் துப்பாக்கி சுடும் போட்டி செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கத்தில் நடைபெற்றது. இதில் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை உட்கோட்டம் ஏர்வாடி காவல் நிலையத்தில் முதல்நிலை பெண் காவலராக பணியாற்றும் ராமலட்சுமி ரைபிள் பிரிவில் 300 யார்டு மற்றும் 100 யார்டு பிரிவில் முதலிடத்தைப் பிடித்து கேடயம் வென்றார். அதோடு மட்டுமில்லாமல் இல்லாமல் ரைபிள் பிரிவு தென்மண்டல காவல் அணி முதலிடமும், ஒட்டுமொத்தமாக இரண்டாம் இடமும் பிடித்து வெற்றி பெற முக்கிய பங்காற்றியுள்ளார்.

Ramalakshmi, the first female police officer to win the state level shooting competition!

மேற்படி துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டு கேடயம் வென்று அடுத்தகட்டமாகத் தேசிய அளவில் நடைபெறவுள்ள துப்பாக்கி சுடும் போட்டிக்கு தேர்வாகி இராமநாதபுரம் மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்த பெண் தலைமைக் காவலர் ஜீனிதா மற்றும் பெண் முதல்நிலை காவலர் ராமலட்சுமி இருவரையும் ஊக்குவிக்கும் விதமாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திக் பாராட்டி பரிசளித்தார்.

Chengalpattu competition
இதையும் படியுங்கள்
Subscribe