Skip to main content

ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் பதவி நீட்டிப்பில் உடன்பாடு இல்லை -ஜி. ராமகிருஷ்ணன் 

Published on 24/12/2018 | Edited on 24/12/2018
ப்

 

 கணிணி கண்காணிக்க மத்திய அரசு குழு அமைத்திருப்பது கண்டத்திற்குரியது. இது ஜனநாயகத்தின் கழுத்தை நெரிப்பதாக உள்ளது என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன்.

 

திருவாரூரில் மார்க்சிஸ்ட் கட்சி தலைமைக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது, " தமிழக அரசு மேற்கொள்ளும் புயல் நிவாரணப் பணிகள் திருப்தியில்லை.   கஜா புயல்  நிவாரணத்தை உயர்த்தி வழங்க வலியுறுத்தி வருகிற 2019ம் ஆண்டு ஜனவரி 2 ம் தேதி முதல் திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஆட்சியர் அலுவலகம்  முன்பு தொடர் காத்திருப்பு போராட்டங்கள் நடத்தப்படும். கணிணி கண்காணிக்க மத்திய அரசு குழு அமைத்திருப்பது கண்டத்திற்குரியது.     இது ஜனநாயகத்தின் கழுத்தை நெரிப்பதாக உள்ளது. இந்த சட்டம் பாசிச தன்மை கொண்டது. இச்சட்டத்தை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெறவேண்டும்.

 

ஸ்டொ்லைட் ஆலை திறப்பதற்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சி சார்பில்  உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக
மூட வேண்டும் என்பதே சிபிஎம் நிலைப்பாடு.

 

ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் பதவி நீட்டிப்பில் உடன்பாடு இல்லை. அரசு துறையில் ஓய்வு பெற்றவர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது ஏற்புடையது அல்ல  என்றார் அவர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆவணங்களை ஒப்படைத்தார் பொன்.மாணிக்கவேல்!

Published on 15/12/2019 | Edited on 15/12/2019

சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு முன்னாள் சிறப்பு அதிகாரி சிலைக்கடத்தல் வழக்குகள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கூடுதல் டிஜிபி அபய்குமாரி சிங்கிடம் ஒப்படைத்தார் பொன்.மாணிக்கவேல். 
 

கடந்த 2018- ஆம் ஆண்டு நவம்பர் 30- ஆம் தேதி ஓய்வுபெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேலை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில், மேலும் ஒரு ஆண்டுக்கு சிறப்பு அதிகாரியாக நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

LORD STATUE IG PON MANICKAVEL HAS GIVE TO DOCUMENT IN TAMILNADU GOVERNMENT

இந்நிலையில் பொன். மாணிக்கவேலின் பதவிக்காலம் முடிந்த நிலையில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியாக டி.எஸ்.அன்பு நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு டிசம்பர் 3- ஆம் தேதி அன்று வெளியிட்டிருந்தது. 


அதைத் தொடர்ந்து சிலைக்கடத்தல் வழக்கு ஆவணங்களை ஏடிஜிபியிடம் ஒப்படைக்க உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. ஆவணங்களை தராததால் பொன் மாணிக்கவேலுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டிருந்தது. இந்த நிலையில் கூடுதல் டிஜிபி அபய்குமாரி சிங்கிடம் சிலை கடத்தல் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் ஒப்படைத்துள்ளார் பொன்.மாணிக்கவேல் என்பது குறிப்பிடத்தக்கது.  

 

Next Story

பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு! 

Published on 05/12/2019 | Edited on 05/12/2019

சிலை கடத்தல் ஆவணங்களை ஒப்படைக்கக்கோரும் அரசாணை எனக்கு பொருந்தாது.  சில கடத்தல் வழக்குகளை விசாரிக்க உயர்நீதிமன்றம் என்னை நியமித்தது.  அதை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. ஆகவே, உயர்நீதிமன்றமோ, உச்சநீதிமன்றமோ உத்தரவிடாமல் ஆவணங்களை ஒப்படைக்க முடியவே முடியாது என்று சிலை கடத்தல் விவகாரத்தில் தமிழக அரசுக்கு பதிலளித்து சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் கடிதம் எழுதியிருந்த நிலையில் தமிழகஅரசு பொன்.மாணிக்கவேல் மீது உச்சநீதிதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்துள்ளது.

 

Tamil Nadu government contempt case against pon.manikkavel


திருச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக பொன். மாணிக்கவேல் கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1ம் தேதி முதல் 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 30ம் தேதி வரை நியமிக்கப்பட்டிருந்தார்.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நடைபெற்ற இந்த நியமனத்தின் அடிப்படையிலான பொன். மாணிக்கவேலின் பதவிக் காலம் டிசம்பர் ஒன்றுடன் முடிவடைந்தது . இதனை சுட்டிக்காட்டி, சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான கோப்புகளை டிசம்பர் ஒன்றுக்குள் ஒப்படைக்கும்படி தமிழக அரசு உத்தரவிட்டது.

சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பாக பொன் மாணிக்கவேலிடம் இருக்கும் கோப்புகள், விவரங்களை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி அபய் குமார் சிங்கிடம் ஒப்படைக்கும் படி அரசாணை வெளியிடப்பட்டது. இது குறித்து தமிழக அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,  சிலை கடத்தல் ஆவணங்களை ஒப்படைக்கக்கோரும் அரசாணை எனக்கு பொருந்தாது.  சில கடத்தல் வழக்குகளை விசாரிக்க உயர்நீதிமன்றம் என்னை நியமித்தது.  அதை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. ஆகவே, உயர்நீதிமன்றமோ, உச்சநீதிமன்றமோ உத்தரவிடாமல் ஆவணங்களை ஒப்படைக்க முடியவே முடியாது என்று தெரிவித்திருந்தார் பொன்.மாணிக்கவேல்.  

 

Tamil Nadu government contempt case against pon.manikkavel

 

இந்நிலையில் அரசு பொறுப்பில் இல்லாத ஒருவர் அரசு ஆவணங்களை வைத்திருப்பது குற்றம் அதன்படி பொன்.மாணிக்கவேல் எந்த ஒரு அரசு பதவியிலும் இல்லாதவர். அவருக்கான பதவிக்காலம் முடிந்துவிட்டது. பதவியில் இல்லாத ஒருவர் அரசு ஆவணங்களை வைத்திருப்பது சட்ட ரீதியில்  குற்றம், இதை இல்லீகல் ஆக்டிவிட்டியாக கருதுகிறோம் என உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக தமிழக அரசு தொடுத்திருக்கிறது. இந்த வழக்கு வரும் 9 ஆம் தேதி விசரணைக்கு வர இருப்பதாக தகவல்களும் வந்துள்ளன.