Advertisment

ராமஜெயம் கொலை வழக்கு; பாமக முன்னாள் நிர்வாகியிடம் விசாரணை

Ramajayam case; Inquiring into the ex-administrator of the pmk

ராமஜெயம் கொலை வழக்கில் பாமக முன்னாள் நிர்வாகியிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

திமுக அமைச்சர் கே.என். நேருவின் தம்பியான திருச்சியைச் சேர்ந்த தொழிலதிபர் கே.என். ராமஜெயம் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் 29-ம் தேதி நடைப்பயிற்சி மேற்கொண்டபோது அடையாளம் தெரியாத நபர்களால் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கு தொடர்பாகப் பல்வேறு கட்ட விசாரணைகள் நடைபெற்று வந்தன. அண்மையில் சிபிசிஐடி பலரிடம் உண்மையைக் கண்டறியும் சோதனைநடத்தியிருந்தது.

Advertisment

இப்படிப் பல ஆண்டுகளாகப் பல கட்டங்களாக விசாரணைகள் நடைபெற்று வந்தன. திருச்சியில் உள்ள பிரபல ரவுடிகளிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்போது திருச்சியைச் சேர்ந்த முன்னாள் பாமக நிர்வாகி பிரபு என்கிற பிரபாகரன் என்பவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனத்தகவல்கள் வெளியாகியுள்ளன.

CBCID pmk thiruchy ramajayam
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe