
இந்து முன்னணி அமைப்பின்நிறுவனர் ராமகோபாலன் (வயது 94) நேற்று உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி அவர் உயரிழந்துள்ளார்.

ராமகோபாலனின் மறைவுக்குத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, "கொள்கையில் நேர் எதிர்நிலையில் இருந்தாலும் மனிதநேயம் அடிப்படையில் சந்திக்கும்போது பண்பு பரிமாறிகொள்வோம்" என இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதேபோல் தி.மு.க தலைவர் ஸ்டாலின், "எதிரெதிர் சித்தாந்தங்களில் இருந்தாலும், கலைஞரும் ராமகோபாலனும் சிறந்த நல்ல நண்பர்களே. ஆழ்ந்த ஆன்மீகச் சிந்தனையுடன் சமயக் கருத்துகளை சமுதாயத்திற்கு எடுத்துரைத்த துறவியின் மறைவு பேரிழப்பு" என இரங்கல்தெரிவித்துள்ளார்.
அதேபோல், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், "இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் மறைவு மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. கொள்கையில் உறுதியாக இருந்து வாழ்க்கையில் உறுதியாக தடம் பதித்த, வீரத்துறவி ராமகோபாலன்" எனவும் தெரிவித்துள்ளார்.
Follow Us