Advertisment

ராமதாஸின் சகோதரி காலமானார்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் சகோதரி சுப்புலட்சுமி காலமானார். இது குறித்து பாமக வெளியிட்டுள்ள செய்தி:

Advertisment

’’பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களின் சகோதரி திருமதி. சுப்புலட்சுமி அம்மையார் அவர்கள் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள மருத்துவர் அய்யா அவர்களின் இல்லத்தில் இன்று மாலை காலமானார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவர் சிறிது காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். சுப்புலட்சுமி அம்மையாருக்கு வயது 90.

மறைந்த சுப்புலட்சுமி அம்மையாருக்கு மருத்துவர் பரசுராமன் என்ற மகனும், விஜயலட்சுமி, குணவதி, கனிமொழி ஆகிய 3 மகள்களும் உள்ளனர். சுப்புலட்சுமி அம்மையார் அவர்களின் கணவர் ஜெயராமன் சில ஆண்டுகளுக்கு முன் காலமானார். சுப்புலட்சுமி அம்மையார் - ஜெயராமன் இணையர் சென்னையில் வாழ்ந்த போது, அவர்கள் இல்லத்தில் தங்கித்தான் மருத்துவர் அய்யா அவர்கள் அவரது இடைநிலைக் கல்வியை நிறைவு செய்தார். சகோதரி மீது அன்பு கொண்ட மருத்துவர் அய்யா அவர்கள் அவரது உடலுக்கு கண்ணீர் மல்க மரியாதை செலுத்தினார். மறைந்த சுப்புலட்சுமி அம்மையார் அவர்களின் இறுதிச் சடங்குகளும், நல்லடக்கமும் நாளை மாலை மருத்துவர் அய்யா அவர்களின் சொந்த ஊரான கீழ்சிவிறியில் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.’’

Ramadoss sister Suupulakshmi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe