veerapandiyar

மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மனைவி ரங்கநாயகி அம்மாள்( வயது 80 ) இன்று காலை 11.30 மணியளவில் சேலத்தில் காலமானார்.

Advertisment

இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள இரங்கல்: ‘’சேலம் மாவட்ட திமுகவின் செயலாளராகவும், தமிழக அமைச்சராகவும் இருந்து மறைந்த வீரபாண்டி எஸ். ஆறுமுகம் மனைவி ரங்கநாயகி அம்மாள் மறைந்தார் என்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன்.

Advertisment

வீரபாண்டி ஆறுமுகம் அவர்களின் அரசியல் வெற்றிக்கு ரங்கநாயகி அம்மாள் உறுதுணையாக இருந்தார். அவருக்கு எதிராக அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட போதும், நெருக்கடி நிலை காலத்திலும் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு துணை நின்றார். குடும்பத்தின் தூணாக செயல்பட்ட அவரது மறைவு வீரபாண்டியார் குடும்பத்துக்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். ’’