தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையானவெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தரமணிதந்தை பெரியார் நகர் பகுதி மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் அன்புமணி ராமதாஸ் வழங்கினார். உடன் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. மூர்த்தி மாவட்டச் செயலாளர் ஜி.வி. சுப்பிரமணியன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.