Ramadoss welcome Chief Minister MK Stalin's announcement

இந்தியாவில் கரோனாவின் இரண்டாம் அலையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல குழந்தைகள், இந்தக் கரோனாவில் தங்களது தாய் தந்தையை இழந்து தவிக்கின்றன. தமிழகத்திலும் இதே நிலமைதான் இருந்துவருகிறது. இக்குழந்தைகளின் நலன் கருதி தமிழக அரசு, கரோனா நோய்த் தொற்றினால் பெற்றோர்களை இழந்து, ஆதரவின்றித் தவிக்கும் குழந்தைகளுக்கு, அவர்களது பெயரில் தலா 5 லட்சம் ரூபாய் வைப்பீடு செய்யவும், அந்தக் குழந்தை 18 வயது நிறைவடையும்போது, அந்தத் தொகை அந்தக் குழந்தைக்கு வட்டியோடு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

Advertisment

அரசின் இந்தச் செயலை வரவேற்று பாமக நிறுவனர் ராமதாஸ், தனது ட்விட்டர் பக்கத்தில், “கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரில் ரூ. 5 லட்சம் வைப்பீடு செய்யப்படும்; 18 வயதில் வட்டியுடன் அத்தொகை வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இது அவர்களுக்கு சிறந்த சமூகப் பாதுகாப்பை அளிக்கும்.

Advertisment

இரு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய அதே பொருளாதார நெருக்கடி, வருவாய் ஈட்டும் ஒரு பெற்றோரை இழக்கும் குழந்தைகளுக்கும் ஏற்படும். எனவே,வருவாய் ஈட்டும் குடும்பத்தலைவரை இழந்த குழந்தைகளுக்கும் இதே உதவிகளை தமிழக அரசு வழங்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.