Advertisment

ராமதாஸ்-சைதை துரைசாமி சந்திப்பு

nn

அண்மையில்விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில்செய்தியாளர்களைச் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், “பா.ம.க தலைவர் பொறுப்பை நானே எடுத்துக் கொள்கிறேன். அன்புமணி இனி பாமக செயல் தலைவராக செயல்படுவார். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பொறுப்பை நானே எடுத்துக் கொள்கிறேன். இன்றைக்குத்தான் நான் தலைவராக பொறுப்பேற்று இருக்கிறேன். நான் தான் இனி நிறுவனர் பிளஸ் தலைவர். நிர்வாகக் குழு, செயற்குழு, சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லோரையும் கூடிப் பேசி கூட்டணி குறித்து முடிவு எடுப்போம். அன்புமணி தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு பல காரணங்கள் உண்டு. அதை இங்கே சொல்ல முடியாது” என தெரிவித்திருந்தார்.

Advertisment

ராமதாஸின் இந்த திடீர் அறிவிப்பால், பா.ம.க உள்பட தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொடர்ந்து இரண்டு நாட்களாகவே பாமகவின் முக்கிய நிர்வாகிகள் ராமதாஸை சந்தித்து சமாதானம் மேற்கொள்ள படையெடுத்து வருகின்றனர். அதேநேரம்நானே பா.ம.க தலைவராக தொடர்வேன் என அன்புமணி அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார். மறுபுறம் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுகஇடம் பெற்றிருக்கும்நிலையில் அதிமுகவின்முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமிவிழுப்புரம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Advertisment
meetings Ramadoss saithai duraisamy pmk admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe