Ramadoss said Tamil Nadu government should act decisively

அதிகரித்து வரும் மெத்தபெட்டமைன் போதைப் பொருள் பயன்பாடு; தமிழக அரசு அதிரடியாக செயல்பட வேண்டும் என பாமக நிறுவனர் ராம்தாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “தமிழ்நாட்டில் கஞ்சா, அபின், ஹெராயின், எல்.எஸ்.டி போன்ற போதைப்பொருட்களின் பயன்பாடு ஏற்கனவே அதிகமாக இருக்கும் நிலையில் இப்போது மெத்தபெட்டமைன் என்ற போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து இந்த போதைமருந்து கடத்தி வரப்படுவது மட்டுமின்றி, வீடுகளிலேயே ஆய்வகம் அமைத்து மெத்தபெட்டமைனை இளைஞர்கள் தயாரிக்கத் தொடங்கியுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை மாதவரத்தில் ரூ.16 கோடி மதிப்புள்ள மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பிடிபட்டது. அந்த போதைப்பொருள் அருப்புக்கோட்டையில் உள்ள ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்டது என்பது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

Advertisment

தமிழ்நாட்டை போதையில்லா மாநிலமாக மாற்றுவதாக வாக்குறுதி அளித்து வெற்றி பெற்ற திமுக ஆட்சியில், திரும்பிய திசையெல்லாம் மதுவும், பிற போதை பொருட்களும் போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த வழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்காக, போதைப் பொருட்கள் தடுப்புப் பிரிவில் துடிப்பான இளம் அதிகாரிகளை அதிகாரிகளை பணியமர்த்தி, அவர்களுக்கு முழுமையான சுதந்திரம் அளிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.