Advertisment

சர்வாதிகாரத்தை தமிழக அரசு கட்டவிழ்த்து விடுவதா? - ராமதாஸ் கேள்வி

Ramadoss questions whether TN government is unleashing dictatorship

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) வெளியானது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கைத் தாமாக முன்வந்து விசாரித்த நிலையில், 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரிக்க உத்தரவிட்டது.

Advertisment

இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று பாமகவின் மகளிர் அணி சார்பில் சௌமியா தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் காவல்துறை போராட்டத்திற்கு அனுமதி மறுத்திருந்தது. இதனிடையே தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட சௌமியா அன்புமணி மற்றும் பாமகவினர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

Advertisment

இந்த நிலையில் இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதில் தொடங்கி அனைத்து விவகாரங்களிலும் தோல்வியடைந்து விட்ட தமிழக அரசு, அதன் தவறுகளையும், தோல்விகளையும் சரி செய்து கொள்வதற்கு பதிலாக அரசின் தோல்விகளைக் கண்டித்து போராட்டம் நடத்தும் எதிர்க்கட்சிகள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு வருகிறது. கடந்த நவம்பர் மாத இறுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்திய போது, அனைத்து நகரங்களிலும் அனுமதி மறுத்த காவல்துறை போராட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே அதில் பங்கேற்க வந்தவர்களை கைது செய்தது. அப்போது தொடங்கி இப்போது வரை எதிர்க்கட்சிகள் போராட்டம் என்று அறிவித்தாலே அவர்களை முன்னெச்சரிக்கையாக கைது செய்து செய்து போராட்டத்தை முடக்குவதில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

திமுக அரசின் இந்த சர்வாதிகாரத்தனமும், அடக்குமுறையும் அதன் அச்சத்தை அப்பட்டமாக அம்பலப்படுத்துகின்றன. மக்கள் நலனையும், சட்டம் & ஒழுங்கையும் காப்பதில் தோல்வியடைந்து விட்ட திமுக அரசு, அதை மக்கள் அறிந்து கொண்டால் வரும் தேர்தலில் படுதோல்வியை பரிசளிப்பார்கள் என்ற அச்சம் காரணமாகத் தான் இத்தகைய அத்துமீறல்களை மேற்கொண்டு வருகிறது. எதிர்க்கட்சிகளை அடக்குவதன் மூலம் எதையும் சாதிக்க முடியாது. திராவிட மாடல் அரசின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன. சட்டப்பேரவைத் தேர்தல் எப்போது நடத்தப் பட்டாலும் அதில் திமுக அரசு கண்டிப்பாக படுதோல்வி அடையும். இது உறுதி”எனக் குறிப்பிட்டுள்ளார்.

pmk Ramadoss
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe