Ramadoss praised Bihar government for caste wise census

இந்தியாவில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சில காரணங்களுக்காக நாடு முழுவதும் சாதிவாரி மக்கள்தொகை நடத்தப்படவேண்டும் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வரும்நிலையில், பீகாரில் முதல்முறையாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது. கடந்த ஜூலை மாதம் பிகாரில் இதற்காகஅனைத்து கட்சிகூட்டத்தை கூட்டி ஆலோசிக்கப்பட்டு நிலையில், முதல்வர் நிதிஷ்குமார் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு உத்தரவிட்டிருந்தார். இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளஇந்த கணக்கெடுப்பு முதற்கட்டபணி இன்று தொடங்கியுள்ளது.

Advertisment

இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் பீகார் அரசை பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புகள் சாத்தியமற்றவை என்பதை முறியடிக்கப்போகும் இரண்டாவது மாநிலம் பீகார். ஏற்கனவே கர்நாடகம் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியுள்ளது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு சாத்தியம் தான் என்பது இதன்மூலம் உறுதியாகிறது. தேசிய அளவிலும், மாநில அளவிலும் வளர்ச்சி மற்றும் சமூகநீதித் திட்டங்களை செயல்படுத்த சாதிவாரி புள்ளிவிவரங்கள் தேவை. எனவே, 2021-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த மத்திய அரசு முன்வர வேண்டும்.

Advertisment

பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு மட்டும் இரு கட்டங்களாக 45 நாட்கள் நடைபெறவிருக்கின்றன. மொத்தம் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட கணக்கெடுப்பாளர்கள் இதில் பங்கேற்கவுள்ளனர். சாதி, கல்வி, பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இந்த கணக்கெடுப்பில் திரட்டப்படவுள்ளன. பீகாரில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்று தொடங்குகிறது. மொத்தம் 12.7 கோடி பேரின் விவரங்கள் இந்த கணக்கெடுப்பின் மூலம் திரட்டப்படவுள்ளன. இந்தியாவின் மிக நீண்ட சமூக நீதி நடவடிக்கையை மேற்கொண்டிருக்கும் பீகார் மாநில அரசுக்கு எனது பாராட்டுகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.