ADVERTISEMENT

முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ராமதாஸ் சந்திப்பு?

11:46 AM Feb 06, 2021 | kalaimohan

ADVERTISEMENT

கோப்புப்படம்

ADVERTISEMENT

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்று (06.02.2021) மாலை பாமக நிறுவனர் ராமதாஸ் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம், கூட்டணி பேச்சுவார்த்தை என தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் நிலையில், வரும் தேர்தலில் அதிமுக - பாமக கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருவதாக அண்மையில் தகவல்கள் வெளியாகி இருந்தது. அதிமுக அமைச்சர்கள் மூன்றுமுறை ராமதாஸை சந்தித்த நிலையில், வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு குறித்த பேச்சுவார்த்தையே அந்தச் சந்திப்பில் நடைபெற்றதாகவும் செய்திகள் உலா வந்தன.

இந்நிலையில் சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவருடன் பாமக நிறுவனர் ராமதாஸ் மாலை நான்கு மணிக்கு சந்திப்பு மேற்கொள்ள இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT