Ramadossmeeting with Edappadi?

கோப்புப்படம்

Advertisment

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்று (06.02.2021) மாலை பாமக நிறுவனர் ராமதாஸ்சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் வருகின்றசட்டமன்றத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம்,கூட்டணி பேச்சுவார்த்தை எனதேர்தல் களம்சூடுபிடித்திருக்கும் நிலையில், வரும் தேர்தலில்அதிமுக - பாமக கூட்டணிதொடர்பான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருவதாகஅண்மையில் தகவல்கள் வெளியாகி இருந்தது. அதிமுக அமைச்சர்கள் மூன்றுமுறை ராமதாஸைசந்தித்தநிலையில், வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு குறித்த பேச்சுவார்த்தையேஅந்தச் சந்திப்பில் நடைபெற்றதாகவும் செய்திகள் உலா வந்தன.

இந்நிலையில் சென்னைக்ரீன்வேஸ்சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவருடன் பாமக நிறுவனர்ராமதாஸ்மாலை நான்கு மணிக்குசந்திப்பு மேற்கொள்ள இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.