Advertisment

“உழவர்களின் கண்ணீரை அரசுதான் துடைக்க வேண்டும்” - ராமதாஸ் வலியுறுத்தல்

 Ramadoss insists tn government should wipe the tears of farmers

காவிரி பாசன மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு தேவை; நெல் கொள்முதலை அதிகரிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்த மழையில் நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் 1.25 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான நெற் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வயல்களில் பெருமளவு தண்ணீர் தேங்கி நிற்பதாலும், மழை நீர் வடிவதற்கு வாய்ப்பில்லை என்பதாலும் அந்த நெற்பயிர்கள் பாதிக்கப்படும் என்று உழவர்கள் கவலை தெரிவித்திருக்கின்றனர். உழவர்கள் அரும்பாடுபட்டு வளர்த்த நெற்பயிர்கள் மழையால் பாதிக்கப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது.

Advertisment

காவிரி பாசன மாவட்டங்களின் பெரும்பான்மையான பகுதிகளில் உள்ள உழவர்கள், மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் தண்ணீர் திறக்கப்படாததால் குறுவை பருவ சாகுபடி செய்யப்படவில்லை. கடந்த ஆண்டும் மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், அதனால் ஏற்பட்ட கடன்களை சம்பா பருவ சாகுபடியில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு அடைத்து விடலாம் என்று உழவர்கள் நம்பிக் கொண்டிருந்தனர். ஆனால், காலம் தவறி பெய்த மழை அவர்களின் நம்பிக்கையை சிதைத்து விட்டது. அதனால் உழவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் கண்ணீரை அரசு தான் துடைக்க வேண்டும்.

கடந்த நவம்பர், திசம்பர் மாதங்களில் பெய்த மழையாலும் சம்பா பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அப்போது பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இழப்பீடு அறிவிக்கப்பட்டாலும் இன்று வரை வழங்கப்படவில்லை. அப்போது அறிவிக்கப்பட்ட இழப்பீடும் போதுமானதல்ல. அண்மையில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கிட்டு ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே சேதமடைந்த பயிர்களுக்கான இழப்பீட்டையும் ஏக்கருக்கு ரூ.40,000 என்ற அளவுக்கு உயர்த்தி வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

இன்னொருபுறம், நடப்பாண்டில் தமிழ்நாட்டிலும், அண்டை மாவட்டங்களில் நெல் விளைச்சல் அதிகரித்திருப்பதால் வெளிச்சந்தையில் நெல் கொள்முதல் விலை கடும் வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளது.அதனால் வெளிச்சந்தையில் நெல்லை விற்பனை செய்தால் உழவர்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும். அதைக் கருத்தில் கொண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உழவர்கள் கொண்டு வரும் நெல்லை முழுமையாக கொள்முதல் செய்ய வேண்டும்; ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையத்திற்கும், ஒவ்வொரு நாளும் எத்தனை குவிண்டால்கள் கொள்முதல் செய்ய வேண்டும் என்பது தொடர்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ள கொள்முதல் இலக்குகளையும் அதிகரிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

tngovt Ramadoss Farmers
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe