Advertisment

“தமிழை வீழச் செய்யாமல் வாழ வைத்தவர்..” - புலமைப்பித்தனுக்கு ராமதாஸ் இரங்கல்

 Ramadoss condolences to Pulamai Piththan

அதிமுகவின் முன்னாள் அவைத் தலைவரான பாடலாசிரியர் புலமைப்பித்தன் (வயது 86) உடல்நலக்குறைவால் காலமானார். அவர், உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், இன்று (08/09/2021) காலை 09.33 மணிக்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

Advertisment

இவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ், மறைந்த புலமைப்பித்தனுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவாது,“அதிமுகவின் முன்னாள் அவைத்தலைவரும், தமிழுணர்வு கொண்ட கவிஞருமான புலவர் புலமைப்பித்தன் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

Advertisment

அதிமுகவை நிறுவிய உறுப்பினர்களில் ஒருவரான புலமைப்பித்தன் தமிழக அரசின் அரசவைக் கவிஞராகவும் பணியாற்றியுள்ளார். எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து இப்போது வரை நூற்றுக்கணக்கான திரைப்படங்களுக்கு பாடல்களை எழுதியவர். தமது பாடல்களில் தமிழை வீழச் செய்யாமல் வாழ வைத்தவர். அதனால் புலவர் புலமைப்பித்தனை எனக்கு பிடிக்கும். அதையும் கடந்து ஈழத்தமிழர்கள் நலனில் அக்கறை கொண்டவர். அதற்காக பல முன்முயற்சிகளை மேற்கொண்டவர் புலமைப்பித்தன்.

புலமைப்பித்தன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

pulamaipithan Ramadoss
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe