/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/guru pmk 001.jpg)
வன்னியர் சங்க தலைவரும், பாமக முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான காடுவெட்டி ஜெ.குரு வெள்ளிக்கிழமை உடல் நலக் குறைவால் காலமானார். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து அவரது உடல் சொந்த ஊரான அரியலூர் மாவட்டம், காடுவெட்டி கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று குருவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ஆகியோர் காடுவெட்டி கிராமத்திற்கு சென்றனர். குருவின் இல்லத்திற்கு சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய அவர்கள், குருவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
ஜெ. குருவின் இறுதிச் சடங்குகள் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு காடுவெட்டி கிராமத்தில் நடைபெறுகிறது என்றும், இதில் ராமதாஸ், அன்புமணி இராமதாஸ் உள்ளிட்டோர் கலந்துகொள்கிறார்கள் என பாமக தலைமை நிலையம் தெரிவித்துள்ளது.
Follow Us