Advertisment

சம்பளம் உயரவில்லை.. சிலிண்டர் விலை மட்டும் உயர்கிறது.. - ராமதாஸ் கண்டனம்

 Ramadoos condemned cylinder price is increasing

Advertisment

வீட்டு உபயோக சிலிண்டரின் விலை கடந்த சில தினங்களுக்கு முன்பு ரூ. 50 உயர்ந்து ரூ.1118.50 என விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “வீட்டுப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை உருளைக்கு ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. அதனால் சென்னையில் ஓர் உருளையின் விலை ரூ.1118.50 ஆக உயர்ந்திருக்கிறது. இது ஏழை மற்றும் நடுத்தர மக்களால் சமாளிக்க முடியாத விலை. இதுஅவர்களின் மாதச் செலவுகளைக் கடுமையாகப் பாதிக்கும். கடந்த 2021-ஆம் ஆண்டு மே மாதத்தில் சமையல் எரிவாயு உருளை விலை ரூ.710 ஆக இருந்தது. கடந்த 20 மாதங்களில்ரூ.408, அதாவது 58% உயர்ந்திருக்கிறது.மக்களின் வருவாய் 5% கூட உயராத நிலையில், சமையல் எரிவாயு விலையை 58% உயர்த்துவது எந்த வகையிலும் நியாயமல்ல.

சமையல் எரிவாயு விலை கடைசியாக கடந்த ஜூலை மாதத்தில் உயர்த்தப்பட்டது. அதன்பின்னர் உலகச் சந்தையில் எரிவாயு விலைசரிந்திருக்கிறது.இந்தியாவிலும் வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு விலை குறைக்கப்பட்டது. வீட்டுப் பயன்பாட்டுக்கான எரிவாயு விலையைக் குறைப்பதற்குப் பதிலாக உயர்த்துவது நியாயமா? சமையல் எரிவாயு விலை ரூ.1000-க்கும் மேல் இருக்கக் கூடாது. எனவே, சமையல் எரிவாயு விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, சமையல் எரிவாயு உருளைகளுக்குரூ.200 மானியம் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

Ramadoss cylinder pmk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe