Skip to main content

கூடா நட்பு கேடாய் முடிந்தது.. புலம்பும் தொண்டர்கள்

Published on 25/05/2019 | Edited on 25/05/2019

 


    கூடா நட்பு கேடாய் முடியும் என்ற முதுமொழிக்கு ஏற்ப தமிழக அரசியலில் நிகழ்ந்துவிட்டது என்று அ.தி.மு.க கூட்டணியின் தொண்டர்கள் புலம்பித்தவிக்கிறார்கள்.

 

v

    

ஜெ. உயிருடன் இருக்கும் வரை பா.ஜ.க வுடன் கூட்டணி வைக்கமாட்டோம் என்று உறுதியாக இருந்தார். மீத்தேன் திட்டம் கொண்டு வந்த போது விவசாயிகள் போராட்டம் என்றதும் அந்த திட்டம் வராது என்று திட்டவட்டமாக சொன்னார்.


    ஆனால் அ.தி.மு.க வின் பலமான தலைவி எதிர்த்த பா.ஜ.க வுடன் ஜெ.வின் பெயரை வைத்துக் கொண்டு ஆட்சி நடத்தும் எடப்பாடி அரசு கூட்டணி வைத்ததால் தமிழகம் முழுவதும் தொகுதிகளை இழந்து நிற்கிறோம் என்று புலம்பத் தொடங்கிவிட்டனர் தொண்டர்கள். அதே போல தான் நேற்றுவரை டயர் நக்கி என்று பேசிவிட்டு இன்று அவரைவிட சிறந்த ஆட்சியாளர் இல்லை என்று சொன்ன அன்புமணியால் பா.ம.கவும் கரைந்தது. வாழ்நாளில் நான் செய்த ஒரே தவறு தே.மு.தி.க வுடன் கூட்டணி வைத்தது தான் என்று ஜெ. சொன்ன தே.மு.தி.க வுடன் கூட்டணி வைத்து அவர்களையும் முடக்கி வைத்தாகிவிட்டது.

 

p

 

இந்த கூட்டணி அமையும் போதே அந்தந்த கட்சி தொண்டர்களும் இந்த கூட்டணியால் கேடு ஏற்படும் என்று கட்சி தலைமைக்கு சொன்னார்கள். ஆனால் கட்சி தலைமைகளே அதை எகத்தாளமாக எட்டி உதைத்தனர். அதன் விளைவை மே 23 ந் தேதி உணர்ந்து விட்டார்கள். இப்போது சுய பரிசோதனை செய்து கொள்வோம் என்றும் ஆய்வு செய்வோம் என்றும் தொண்டர்களுக்கு ஆறுதல் சொல்கிறார்கள்.

 

 இது குறித்து அ.தி.மு.க தொண்டர்கள் கூறும் போது.. கடந்த தேர்தலில் பா.ஜ.க எத்தனையோ முயற்சிகள் செய்தது கூட்டணி அமைக்க.  ஆனால் அம்மா (ஜெ). முடியாது என்று சொன்னதுடன் எந்த காலத்திலும் கூட்டணி வைக்க மாட்டோம் என்று உரக்க சொல்லிவிட்டு அந்த மோடியா? இந்த லேடியா என்று பார்த்துவிடுவோம் என்று சவால் விட்டு தேர்தலை சந்தித்தார். அந்த தில்.. பேச்சு தமிழகத்தின் அத்தனை தொகுதிகளையும் அ.தி.மு.க வுக்கு பரிசாக கொடுத்தார்கள் மக்கள். தொண்டர்களின் உழைப்பு வீண் போகவில்லை.

 

v

 

கன்னியாகுமரியில் மட்டும் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொடுத்த மக்கள் 5 ஆண்டு பா.ஜ.க ஆட்சி பற்றி அறிந்து கொண்டனர். அதன் பலன் தூத்துக்குடியில் 15 உயிர்களை பறித்துக் கொண்டதுடன் தமிழக விவசாயிகளை வீதியிலும் வயலிலும் இறங்கி போராட வைத்துவிட்டார்கள். போதாக்குறைக்கு எச்.ராஜா தமிழன் சுயமரியாதையுடன் வாழக் கற்றுக் கொடுத்த தந்தை பெரியார் சிலைகளை உடைக்க வேண்டும் என்று பேசிவந்தார்.  மக்கள் பா.ஜ.க மீதான வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருந்தனர். எப்போது அந்த வெறுப்பை வெளிக்காட்டலாம் என்று காத்திருந்தனர்.


இந்த நேரத்தில் போய் அந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கலாமா? கட்சியின் பெரிய புள்ளிகள், அமைச்சர்கள் பலரை லாவகமாக பிடித்துக் கொண்ட பா.ஜ.க அவர்களை பயமுறுத்தியே கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டது. அதை எடப்பாடி – ஓ.பி.எஸ். ஆல் மீற முடியவில்லை. மீறியிருந்தால் இன்று பல தொகுதிகளை பிடித்திருக்கலாம்.


இந்த கூட்டணி தமிழக மக்களின் வெறுப்பை கூடுலாக்கி தான் மொத்த வெறுப்பையும் அந்த கூட்டணி மீதே கொட்டிவிட்டனர்.  அதே போல தான் பா.ம.க.. மருத்தவர் ராமதாசும், அன்புமணி ராமதாசும் அம்மாவைப் பற்றி என்னவெல்லாம் பேசினார்கள். நினைவிடத்தை அகற்ற வேண்டும் என்றார்கள். ஊழல் என்று பட்டம் கொடுத்தார்கள். டயர் நக்கிகள் என்று சொன்னார்கள். அவர்களிடம் போய் கூட்டணி என்றதும் அ.தி.மு.க தொண்டனாலும் ஏற்கமுடியவில்லை. அந்த கட்சி பா.ம.க தொண்டனாலும் ஏற்க முடியவில்லை. சந்தர்ப்பத்திற்காக அமைந்த கூட்டணி என்றனர். அதைவிட கொடுமை பிரச்சாரங்களில் ஊழல் ஆட்சி என்று சொன்னவர்களே சிறந்த ஆட்சி என்று சொன்னதும்.. மக்களை மேலும் வெறுப்படைய வைத்தது. அதன் பலன் அந்த கட்சியையும் சேர்த்து தொண்டர்கள் முடக்கிப் போட்டனர்.

 

p


 தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் சட்டமன்றத்தில் ஜெ. வுடன் நேருக்கு நேர் விவாதம் செய்தார். எங்களால் தான் ஆட்சி என்றார் விஜயகாந்த்.. எங்களால் தான் எதிர்கட்சி அந்தஸ்து என்றார் ஜெ. சொல்லிவிட்டு நான் செய்த மிகப் பெரிய தவறு தே.மு.தி.க வுடன் கூட்டணி வைத்தது தான். இனி ஒரு முறை அந்த தவறை செய்ய மாட்டேன் என்றார். அதே வீராப்பு இருவரிடமும் கடைசிவரை இருந்தது. ஆனால் ஜெ மறைவுக்கு பிறகும் விஜயகாந்த் உடல்நிலை பாதிப்பிற்கு பிறகு அந்தந்த கட்சி தலைமைகள் தறிகெட்டு போவதால் எடுத்த முடிவு தவறாகிவிட்டது. 


 ஒட்டு மொத்தமாக பா.ஜ.க வுடன் கூட்டணி வைத்ததன் விளைவு தான் இன்று இப்படி ஒன்றுமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு நிற்கிறது கூட்டணி கட்சிகள். நெருக்கடி கொடுத்து கூட்டணி வைத்துக் கொண்ட பா.ஜ.க வடக்கில் ஜெயித்து ஆட்சிக்கு வந்துவிட்டது. 


பா.ஜ.க ஆட்சிக்கு வந்தாலும் அங்கே அவர்களுக்கு ஓட்டுப் போட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்க வழியில்லாமல் தமிழகத்திற்கும், ஆந்திரா, கேரளாவுக்கு தான் ஏற்றுமதி செய்து திராவிட நாட்டின் வளங்களை அள்ளிச் செல்ல அனுப்புகிறார்கள். கூலி வேலைக்கு அவர்களை அனுப்பிவிட்டு இயற்கை வளங்களை அள்ளிக் கொண்டு போக வடக்கில் இருந்து கார்ப்பரேட் நிறுவனங்களையும் அனுப்புகிறார்கள். 


இன்னும் சில மாதங்களில் பழைய பயமுறுத்தலோடு நம் விவசாயத்தையும், தொழில், போன்றவற்றை அழிக்கும் நாசகார திட்டங்களை நலத்திட்டங்கள் என்ற பெயரில் சோதனைக்கு தமிழகம் வருவார்கள். இனி வரும் போது துணை ராணுவமும் துணைக்கு வரும். அப்போது தெரியும் ஏன் இந்த நட்பு வைத்தோம் என்று.


 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசியல் வருகை குறித்த கேள்விக்கு சண்முகப்பாண்டியன் பதில்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
shanmuga pandian press meet

விஜயகாந்தின் இரண்டாவது மகனான சண்முகப் பாண்டியன் சகாப்தம், மதுர வீரன் ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது படைத் தலைவன் படத்தில் நடித்து வருகிறார். டைரக்டர்ஸ் சினிமாஸ் தயாரிப்பில், உருவாகும் இப்படம் காட்டு யானைகளின் வாழ்வியலை மையப்படுத்தி ஆக்‌ஷன் ஜானரில் உருவாகிறது. யு. அன்பு இயக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். மேலும் ராகவா லாரன்ஸ் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். 

இந்த நிலையில் இன்று சண்முகப் பாண்டியன் பிறந்தநாள் காண்கிறார். இதையொட்டி பிரேமலதா விஜயகாந்துடன் விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். இன்று விஜயகாந்த் மறைந்து 100 நாள் நிறைவடைகிறது குறிப்பிடத்தக்கது. விஜயகாந்த இல்லாமல் முதல் பிறந்தநாளைக் காண்கிறார். அஞ்சலி செலுத்திய பின்பு செய்தியாளர்களிடம் பேசினார். 

அப்போது அவரிடம் விஜய பிரபாகரரை போல் அரசியலுக்கு வரும் எண்ணம் உள்ளதா என்ற கேள்வி கேட்கப்பட்ட நிலையில் பதிலளித்த அவர்,  “நான் இப்போதைக்கு சினிமாவில் இருக்கிறேன். அண்ணன் அரசியலில் இருக்கிறார். அப்பாவின் ஒரு துறையை அண்ணன் எடுத்துக் கொண்டார். இன்னொரு துறையை நான் எடுத்துக்கொண்டேன்” என்றார். 

இதனிடையே சண்முகப் பாண்டியனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சிறிய வீடியோ ஒன்றை சர்பிரைஸாக வெளியிட்டுள்ளனர் படைத் தலைவன் படக்குழு. அப்படக்குழுவினரும் சண்முகப் பாண்டியனோடு இணைந்து விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.  

Next Story

விஜயகாந்த் மறைந்து 100ஆவது நாள் - கண்ணீருடன் பிரேமலதா அஞ்சலி

Published on 06/04/2024 | Edited on 06/04/2024

 

நடிகர், தேமுதிக நிறுவனத் தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த், கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது. அவரது இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். அவரது நினைவிடத்திற்கு இன்றும் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் விஜயகாந்த் மறைந்து இன்றோடு 100 நாள்கள் நிறைவைடைகிறது. இதையொட்டி பிரேமலதா, விஜயகாந்த் நினைவிடத்தில் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினார். அவருடன் மகன் சண்முகபாண்டியன் உடனிருந்தார். அவருக்கு இன்று பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. 

படங்கள் - எஸ்.பி.சுந்தர்