Skip to main content

’காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டம் குறித்து பட்ஜெட்டில் இடம் பெறாததும் மிகவும் ஏமாற்றமளிக்கிறது’ -ராமதாஸ்

Published on 05/07/2019 | Edited on 05/07/2019

 


பட்ஜெட் 2019 -20 குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை: நாடாளுமன்றத்தில் 2019-20ஆம் ஆண்டுக்கான  திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையை  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருக்கிறார். ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வரிச்சுமையை குறைக்கவும், வாழ்வாதாரங்களை பெருக்கவும் நிதிநிலை அறிக்கையில் திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்திருந்த நிலையில், அதற்கான எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது.

r

 

மாதாந்திர வருவாய் பிரிவினர் தங்களது வருமானத்தில் பெரும்பகுதியை வருமானவரியாக செலுத்தி வரும் நிலையில், அவர்களுக்கு சலுகை அளிக்கும் வகையில் வருமானவரி விலக்குக்கான உச்சவரம்பை  இப்போதுள்ள 2.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை அனைத்து தரப்பினராலும் எழுப்பப்பட்டு வந்தது. ஆனால், அந்தக் கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை. ஆண்டு வருமானம் ரூ.2 கோடி முதல் 5 கோடி வரையிலும், 5 கோடிக்கு அதிகமாக இருப்பவர்களுக்கும் முறையே 3%, 7% கூடுதல் வரி விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. மத்திய அரசின் நேரடி வரி வருவாய் 2013-14 ஆம் ஆண்டு முதல் இப்போது வரை 78% அதிகரித்திருப்பதாகவும், வரி செலுத்துவோர் எண்ணிக்கை  48% அதிகரித்திருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், அதன் பயன்கள் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதை செய்ய மத்திய அரசு தவறிவிட்டதான் மூலம் நடுத்தர வர்க்கத்தினரின் நலனில் அக்கறை இல்லை என்பதை நிரூபித்துள்ளது.

 

ரூ.45 லட்சம் வரை மதிப்புள்ள வீடுகளை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் வாங்குபவர்கள், அதற்கான வீட்டுக்கடன் மீது செலுத்தும் வட்டியில் கூடுதலாக 1.5 லட்சத்திற்கு வரிச்சலுகை வழங்கப் படும் என்று அறிவித்துள்ளது. இதனால் பெரிய அளவில் எந்த பயனும் கிடைத்து விடாது. ஏற்கனவே ரூ.2 லட்சம் வரையிலான வட்டிக்கு வரிச்சலுகை வழங்கப்பட்டு வருகிறது. இப்போது ரூ.3.5 லட்சம் வரையிலான வட்டிக்கு வரிச்சலுகை கிடைக்கும். ஆனால், ரூ.45 லட்சம் வரை மதிப்புள்ள வீட்டுக்கு அதிகபட்சமாக ரூ.36 லட்சம் மட்டுமே கடன் பெற முடியும் என்ற நிலையில், அதன்மீது ஒரு சில ஆண்டுகளுக்கு மட்டும் தான் ரூ.3.5 லட்சம் வட்டி கட்ட வேண்டியிருக்கும். அதன்பின்னர் இச்சலுகையால் எந்த பயனும் இருக்காது. அதுமட்டுமின்றி, பெட்ரோல், டீசல் மீது ரூ.2 கூடுதல் வரி விதிக்கப்பட்டு இருப்பது அப்பாவி ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மீது சுமையை அதிகரித்துள்ளது. இது அநீதியாகும்.

 

அதேபோல், தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 10 விழுக்காட்டிலிருந்து 12.5% ஆக உயர்த்தி இருப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும். முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நடப்புக் கணக்கு பற்றாக்குறை அதிகரித்ததால், அதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்கான, இடைக்கால ஏற்பாடாகவே இறக்குமதி வரி அறிமுகம் செய்யப்பட்டது. நடப்புக்கணக்கு பற்றாக்குறை சரியானதும் இந்த வரி ரத்து செய்யப்படும் என்று அப்போதைய காங்கிரஸ் அரசும், அதன்பின் பதவியேற்ற மோடி தலைமையிலான அரசும் அறிவித்திருந்தன. ஆனால், அந்த வரியை ரத்து செய்யாதது ஒருபுறமிருக்க,  அதை 12.5% ஆக அதிகரித்திருப்பது எந்த வகையிலும் நியாயமல்ல. ஏற்கனவே, தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.27 ஆயிரத்தை நெருங்கிவரும் நேரத்தில் இந்த வரி உயர்வால் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.700 வரை உயரக்கூடும். நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வரிவிதிப்பின் அளவு குறைவாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் பிசிராந்தையாரின் புறநானூற்றுப் பாடலை மேற்கோள்காட்டி பேசினார். ஆனால், அவர் அறிவித்துள்ள  வரி உயர்வுகள் பிசிராந்தையார் கூறிய அறிவுரைகளுக்கு முற்றிலும் முரணாக அமைந்திருக்கின்றன.

 

அதேநேரத்தில் தொழில்துறை வளர்ச்சி மற்றும் புதிய நிறுவனங்களுக்கு உதவுவதற்காக அறிவிக்கப் பட்டுள்ள திட்டங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கக்கூடியவை ஆகும். அதேபோல், மறைமுக வரிகள் பிரிவில் சில பொருட்களுக்கான இறக்குமதி வரிகள் குறைக்கப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கவை ஆகும். வேளாண்துறை வளர்ச்சிக்காக அத்துறையில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருப்பதும் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

 

நீர்வளத்துறை அமைச்சகத்தின் சார்பில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், நதிகள் இணைப்புத் திட்டம் குறித்து எதுவும் அறிவிக்கப்படாததும், குறிப்பாக தமிழகத்திற்கு பயனளிக்கும் காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டம் குறித்து எதுவும் இடம் பெறாததும் மிகவும் ஏமாற்றமளிக்கிறது.

 

இந்தியாவை 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக முன்னேற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் வளர்ச்சி என்ற போர்வை போர்த்தி மூடப்பட்டிருந்தாலும், இந்த நிதிநிலை அறிக்கைகள் வரிச்சுமை சற்று அதிகமாகவே உள்ளது.’’


 

சார்ந்த செய்திகள்

Next Story

'அப்பன்' என்பது கெட்ட வார்த்தையா? - உதயநிதி ஸ்டாலின் கேள்வி  

Published on 23/12/2023 | Edited on 23/12/2023
Is 'appan' a bad word?-Interview with Minister Udayanidhi Stalin

‘அப்பன்’ என்பது கெட்ட வார்த்தையா? என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வினவியுள்ளார்.

நேற்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ''மழைக்கு முன் 92 சதவீதம் வடிகால் பணி முடிந்தது என்று கூறினார்கள். மழைக்குப் பின் 45 சதவீதம் பணிகளே நிறைவு என மாற்றி பேசினார்கள். 4000 கோடி என்னவானது? 2015-ல் ஏற்பட்ட வெள்ளத்தில் மாநில அரசு கற்றுக் கொண்ட பாடம் என்ன?'' தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை பேரிடராக அறிவிக்க முடியாது. இதுவரை எந்த மாநிலத்திலும் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்ததில்லை. அதற்கான வழக்கம் இல்லை'' என பேசியிருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “நான் அப்பன் வீட்டு பணத்தையா கேட்கிறேன். மக்கள் வரிப்பணத்தைத்தானே கேட்கிறேன் என  பேசியதை தப்புன்னு சொல்றாங்களா. நான் வேணும்னா இப்படி சொல்லட்டுமா. மாண்புமிகு மத்திய அமைச்சரோட மரியாதைக்குரிய அப்பா சொத்தை நாங்க கேட்கல. தமிழக மக்கள் கட்டும் வரிப் பணத்தை தான் கேட்கிறோம்” எனத் தெரிவித்திருந்தார். இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஏற்கனவே தமிழிசை சவுந்தரராஜனும் உதயநிதியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். 

 

Is 'appan' a bad word?-Interview with Minister Udayanidhi Stalin

இந்நிலையில், சென்னையில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான வங்கி கடன் இணைப்பு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், ''நான் ஏதாவது கெட்ட வார்த்தை சொன்னேனா? மரியாதைக்குரிய நிதியமைச்சரிடம் மீண்டும் மரியாதையாக நான் கேட்டுக் கொள்கிறேன். என்னுடைய சொந்த விஷயத்திற்காக கேட்கவில்லை. தமிழ்நாடு மக்கள் கடும் பேரிடரில் உள்ளனர். பேரிடர் என்றும் ஒத்துக்கொள்ள மாட்டேன் என்கிறார்கள். சோசியல் மீடியாவில் கூட ஒரு நண்பர் பதிவிட்டிருந்தார். 10 வருட பாஜக ஆட்சியே கடும் பேரிடர் என்பதால் இதனை தனியாக பேரிடர் என்று பார்க்க மாட்டோம் என்று சொல்கிறோம் என பதிவிட்டிருந்தார். அதுபோல் தயவுசெய்து தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்காதீர்கள். எதை வைத்து அவர்கள் இப்படி பேசுகிறார்கள் என்று தெரியவில்லை.

மத்திய குழுவை அமைத்தார்கள். அவர்கள் எல்லாருமே இங்கு வந்து எல்லாவற்றையும் ஆராய்ந்து இழப்பீடு ஏற்பட்டிருக்கிறது. தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது என்று சொல்லிவிட்டு சென்றார்கள். ஆனால் நிதியமைச்சர் இதனை முழுவதுமாக அரசியல் ஆக்க முயற்சிக்கிறார். நான் யாரையும் மரியாதைக் குறைவாக பேசியதில்லை. தமிழ்நாட்டு மக்கள் குறிப்பாக சென்னை மக்கள், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட மக்கள், தென் தமிழகத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் தூத்துக்குடி மாவட்டம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில இடங்களில் தண்ணீர் வடியவில்லை. நேற்று மாலை வரை ஏரல் பகுதியில் இருந்தேன். நேற்று முன்தினம் காயல்பட்டினம் சென்று இருந்தேன். இன்னும் பாதிப்பில் இருந்து முழுமையாக வெளியே வரவில்லை. எனவே மீண்டும் நிவாரண தொகையை கொடுங்கள் என மரியாதையாக கேட்கிறேன். நான் என்ன அநாகரிகமாக பேசி விட்டேன். 'அப்பன்' என்பது கெட்ட வார்த்தையா? தெரியாமல் தான் கேட்கிறேன்.  மரியாதைக்குரிய ஒன்றிய நிதியமைச்சர் உடைய மரியாதைக்குரிய அப்பா, வணக்கத்திற்குரிய அப்பா, மாண்புமிகு அப்பா எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்'' என்றார்.

Next Story

நிர்மலா சீதாராமனுடன் அண்ணாமலை சந்திப்பு

Published on 22/12/2023 | Edited on 22/12/2023
 Annamalai meeting with Nirmala Sitharaman

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில் தமிழ்நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்குவது குறித்து பேசியதாகக் கூறப்படுகிறது.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. அதே சமயம் தொடர் கனமழை எதிரொலியாக குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வெள்ள நிவாரணத்திற்கான தொகையை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் உடன் இருந்தார். நேற்று திமுகவின் மூத்த அமைச்சர்களில் ஒருவரான பொன்முடி வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பு வெளியாகி இருந்த நிலையில், இந்த சந்திப்பில் அது குறித்தும் விவாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் யூகங்கள் கிளம்பியுள்ளன.

இன்னும் சற்று நேரத்தில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.