முரசொலி நில விவகாரம் தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்காலத்தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
பஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலகம் அமைந்திருப்பதாகவும், அந்த இடத்தின் மூலப்பத்திரத்தை மு.க ஸ்டாலின் வெளியிட வேண்டும் எனவும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
அடிப்படை ஆதாரம் இல்லாமல் திமுக மீது குற்றச்சாட்டை முன்வைத்ததாகக் கூறி, பாமக நிறுவனர் ராமதாஸுக்கு எதிராக முரசொலி அறக்கட்டளையின் நிர்வாகி ஆர்.எஸ் பாரதி எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம், அவதூறு வழக்கில் மார்ச் 20-ம் தேதி நேரில் ஆஜராக மருத்துவர் ராமதாசுக்கு உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரியும், தன் மீதான வழக்கு விசாரணையை ரத்து செய்யக் கோரியும் ராமதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களித்தும், வழக்கு விசாரணைக்கு இடைக்காலத்தடை விதித்தும் உத்தரவிட்டு, விசாரணையை 4 வார காலத்திற்கு தள்ளிவைத்தார்.