Advertisment

ஒரு ஏக்கர் கூட இல்லாத ராமதாசுக்கு பல்லாயிரக்கணக்கான ஏக்கர் சொத்து சேர்ந்தது எப்படி? வேல்முருகன் 

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கோவையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வன்னியர் அறக்கட்டளை சொத்துக்கள் எங்கே? என்று பாமக நிறுவனர் ராமதாசுக்கு கேள்வி எழுப்பினார்.

Advertisment

v

’’வன்னியர் சங்கத்தினால் கட்டப்படுகின்ற அனைத்து கட்டிடங்களும், கல்லூரிகளும் உலகம் முழுவதும் வாழுகின்ற வன்னியர்களுக்கு சொந்தமானது என்று சொல்லித்தான் ஊர் ஊராக தெருத்தெருவாக சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார் ராமதாஸ். இதையடுத்து அறக்கட்டளைக்காக வன்னியர் சமூகத்தில் இருக்கின்ற செல்வந்தர்களிடம் வசூல் செய்தோம். அண்டா, குண்டா, தாலி, மெட்டி எல்லாம் அடகு வைத்து வெளியாட்டில் சென்று ஒட்டகம் மேய்த்து, கட்டட வேலை செய்து சம்பாத்த பணத்தில் பல இளைஞர்கள் அறக்கட்டளைக்காக உதவினார்கள். சாதாராண கூலித்தொழிலாளிகளும், விவசயிகளூம் கொடுத்த உதவியில்தான் கட்டப்பட்டது வன்னியர் அறக்கட்டளை.

Advertisment

டாக்டர் ராமதாஸ் வன்னிய சமூக மக்களின் ரத்தத்தை உறிஞ்சி அந்த ரத்தத்தில் உள்ள அணுக்களை கூட அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தி அவரும் அவரது குடும்பமும் இன்று இந்தியாவிலேயே மிகவும் செல்வந்தர் குடும்பமாக வாழ்கிறார்கள். இந்தியாவிற்கே செல்வந்தர்களாக இருந்த வன்னிய மக்கள் ஓட்டாண்டிகளாக நடுத்தெருவில் நிற்கின்றனர்.

v

சிதம்பரத்தில் வன்னிய சமுதாய மாணவர்கள் தங்கிப்படிக்க வாங்கிய கட்டிடத்தை புதுப்பிக்க வேண்டும் எனக்கூறி தன் மகன் அன்புமணி பெயரில் வாங்கிக்கொண்டார். எச்.டி.எப்.சி. வங்கியில் 13 ஆயிரம் டெபாசிட் இருந்தது. அதை திருப்பிக்கேட்டால் பதில் இல்லை.

ராமதாசுக்கு சொந்தமாக அன்று ஒரு ஏக்கர் கூட இல்லை. மாமியார் வீட்டில் கொடுத்த ஒன்றரை ஏக்கர் நிலத்திற்கு மட்டுமே சொந்தக்காரராக இருந்தார். இப்போது பல்லாயிரக்கணக்கான ஏக்கருக்கு ராமதாஸ் சொந்தக்காரர் ஆனது எப்படி? தைலாபுரத்தில் இருந்து ஏற்காடு, சென்னை திண்டிவனம் வரையிலும் பல்லாயிரம் ஏக்கர் சொத்துக்கள் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் வாங்கியிருக்கிறார். அவர் இன்று உத்தமபுத்திரன் மாதிரியும், அரிச்சந்திரன் வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்காரர் மாதிரியும் ஸ்டாலின் அறிக்கைக்கு பதில் விடுக்கிறார். நான் ராமதாசையும், அன்புமணியையும் விவாதத்திற்கு அழைக்கிறேன். அதற்கு ஏன் வர மறுக்கிறார்கள்?’’என்று வேல்முருகன் ராமதாசுக்கு கேள்வி எழுப்பினார்.

anbumani pmk ramadas tvk velmurugan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe