Advertisment

இஸ்லாமிய மக்களுக்கு அமைச்சர் கே.எஸ்.மஸ்தானின் வேண்டுகோள்!

ramadan festival minister has request to peoples

தமிழக சிறுபான்மையினர்நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ரமலான்(14/05/2021) பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் தொழுகை நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும்" என்று இஸ்லாமிய சமுதாயத்தின் சார்பில் தமிழ்நாடு அரசு கோரிக்கை வந்திருக்கிறது. கரோனாஇரண்டாவது அலை மிகத் தீவிரமாகப்பரவி வருவதால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, அந்தஊரடங்கு 10/05/2021 முதல் 24/05/2021 வரை நடைமுறையில் இருந்து வருகிறது.

Advertisment

அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வரும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "முழு ஊரடங்கை முழுமையாகக் கடைப்பிடிப்பீர்" என்று ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருக்கிறார். கரோனா நோய்த் தொற்றும், அதைத் தடுக்க ஊரடங்கும்நடைமுறையில் இருக்கின்ற இந்தத் தருணத்தில், அனைத்து சமயங்களைச் சார்ந்தவர்களும், மதம் சார்ந்த விழாக்களையும் தவிர்த்து, தொற்றைக் குறைக்க அரசு எடுத்துவரும் முயற்சிகளுக்கு முழுஒத்துழைப்பு வழங்கி வருகிறார்கள்.

Advertisment

சிறுபான்மையின மக்கள் மீது திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இருக்கும் மதிப்பும் மரியாதையையும் நன்கு அறிந்த இஸ்லாமிய பெருமக்கள் அனைவரும் இந்த ரமலான் பண்டிகையை தங்களது இல்லங்களிலேயேதமிழ்நாடு அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக்கடைப்பிடித்து, தனிமனித இடைவெளி விட்டு ரமலான் பண்டிகையைச்சிறப்பாகக்கொண்டாடி மகிழ்ந்திட வேண்டுமாய்அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்". எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

prevention coronavirus Festival ramadan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe