Ram Pandi  case; Five people are Saran

பசுபதி பாண்டியன் ஆதரவாளர் ரவுடி ராமர் பாண்டி என்பவர் கரூரில் தலை சிதைந்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருந்தார். இந்த கொலை வழக்கில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், 12 ஆண்டுகளுக்கு முன்பு அரங்கேறிய கொலைக்குப்பழிக்குப் பழியாக ராமர் பாண்டி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

Advertisment

கடந்த 2012 ஆம் ஆண்டு பசும்பொன் தேவர் ஜெயந்தி முடித்துவிட்டு மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தவர்கள் மீது பெட்ரோல் வீசிய சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே ஏழு பேர் உயிரிழந்தனர். அதில் ரவுடி ராமர் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வழக்கு விசாரணைக்காக சென்றுவிட்டுத்திரும்பி வந்து கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த ராமர் பாண்டி மீது மர்ம நபர்கள் சரமாரியாகத்தாக்குதல் நடத்தி தலையைச் சிதைத்தது பரபரப்பைஏற்படுத்தி இருக்கும் நிலையில், இந்த கொலை சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் நீதிமன்றத்தில் ஐந்து பேர் தற்போது சரணடைந்துள்ளனர்.

Advertisment

மதுரை கருப்பாயூரணி பகுதியைச் சேர்ந்த வினோத்குமார், பூவந்தி பகுதியைச் சேர்ந்த மகேஷ்குமார், மேலூர் பகுதியைச் சேர்ந்த பாரதி, தனுஷ் மற்றும் தர்மா ஆகிய ஐந்து நபர்கள் கொலை வழக்கு சம்பந்தமாக சரணடைந்துள்ளனர்.