forest

காடுகள் ஆக்கிரமிப்பு, காடுகளை அழித்தல், வளங்களை சுரண்டுதல் போன்றவற்றை தடுக்க வலியுறுத்தி கோவையில் பள்ளி மாணவர்கள், ஆர்வலர்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது.

Advertisment

சமீபகாலமாக அதிகரித்து வரும் காடுகள் ஆக்கிரமிப்பு, காடுகளை அழித்தல், வளங்களை சுரண்டுதல் போன்றவற்றை தடுக்க வலியுறுத்தியும், காடுகளை காப்பதன் அவசியத்தை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில், தன்னார்வ அமைப்பின் சார்பில் பேரணி நடைபெற்றது.

Advertisment

கோவையில் உள்ள பந்தய சாலை பகுதியில் துவங்கிய இந்த பேரணியில், பள்ளி மாணவர்கள் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். காடுகளின் அவசியத்தை வலியுறுத்தி பதாகைகளை கையில் மாணவர்கள் பிடித்து சென்றனர். உயிர் சூழலுக்கு காடுகள் எந்த அளவிற்கு முக்கியத்துவம் பெற்று உள்ளது என அவர்கள் வலியுறுத்தினர்.