மனிதநேய மக்கள் கட்சி சார்பாக 2 கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் இன்று (06.07.2025) மாநாடு நடைபெற்று வருகிறது. முன்னதாக பாண்டி கோயில் அருகே உள்ள வண்டியூர் பகுதியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பாகப் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை அக்கட்சியின் தலைவர் ஜவஹிருதுல்லா தொடங்கி வைத்தார். அந்த வகையில் இந்த பேரணி சுமார் 2 கி.மீ. தூரத்திற்கு நடைபெற்றது.
இதில் உள்ளாட்சி அமைப்பு முதல் நாடாளுமன்றத் தேர்தல் வரை சிறுபான்மையினருக்கு உரியப் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய வேண்டும். புதிய வக்ஃப் வாரிய சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 2 கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன். இந்த மாநாட்டில் சுமார்10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர் எனக் கூறப்படுகிறது. இதனையொட்டி மனிதநேய மக்கள் கட்சி சார்பாக பல்வேறு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
அந்த வகையில் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளவர்களுக்குத் தேவையான குடிநீர் வசதி, கழிப்பிடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக வருபவர்களுக்கும், அவ்வழியாகச் செல்வோருக்கும் வசதியாகப் போக்குவரத்து காவல் துறை சார்பில் பல்வேறு மாற்றுப் பாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன.