நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள மேலப்பாளையத்தில் இன்றுஅனைத்து முஸ்லிம் அமைப்புகளும் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து பேரணிக்கு அறைகூவல் விடுத்திருந்தன.

Advertisment

அதன்படி இன்று மதியம் மாலை சுமார் 5 மணி அளவில் ஆண்கள், பெண்கள் என மொத்த மக்கள் திரண்டனர். அங்கிருந்து நேரடியாக கிளம்பி மேலப்பாளையத்தில் முக்கிய வீதிகளில் சென்றவர்கள், நகரின் ஜின்னா திடலில் கூடி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி உரையாற்றினர்.

Advertisment

rally in nellai

இந்த பேரணியில் 680 அடி நீளமுள்ள தேசியக் கொடியை சுமந்தவாறு மக்கள் சென்றனர். குடியுரிமை சட்டத் திருத்தத்தை வாபஸ் பெற வேண்டும் என்று மத்திய-மாநில அரசுக்கு எதிரான கோசங்களை எழுப்பி கோரிக்கை விடுத்தனர். இதன் காரணமாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.