Advertisment

ரெம்டெசிவிர் மருந்து வாங்க அலைமோதிய கூட்டம்... (படங்கள்)  

Advertisment

தமிழகத்தில் இரண்டாம் அலை காரணமாக நாளுக்கு நாள் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் இன்று மேலும் 15,830 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று சென்னையில் ஒரே நாளில் 4,640 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1,08,855 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும்பாலும் ரெம்டெசிவிர் மருந்து பரிந்துரைக்கப்படுகிறது. தற்போது ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தனியார் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளின் உறவினர்களை வெளியில் இருந்து ரெம்டெசிவிர் மருந்தை வாங்கி வர பரிந்துரைகின்றனர். ஒரு டோஸ் ரெம்டெசிவிர் 1,500 ரூபாய் என இருக்கும் நிலையில் கள்ளச் சந்தையில் இதன் விலை பல்லாயிரக்கணக்கில் கூடி உள்ளது.

இந்நிலையில் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனைய நேற்று துவங்கியது. இரண்டாவது நாளான இன்று பல்வேறு மாவட்டங்களிலிருந்து ரெம்டெசிவிரை வாங்க நோயாளிகளின் உறவினர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அதிகாலையிலேயே குவிந்தனர். அறிவிக்கப்பட்ட நேரத்தில் மருந்துகள் வழங்கப்படாததால் அங்கு நீண்ட வரிசையில் காத்திருந்தவர்களால் சிறிது நேரம் கூச்சம் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. நேற்று டோக்கன் பெற்றவர்கள் உரிய ஆவணங்களை காண்பித்து ரெம்டெசிவிர் மருந்தினை வாங்கி சென்றனர். அதிகபட்சமாக ஒரு நபருக்கு 6 டோஸ் வரை மட்டுமே கொடுக்கப்பட்டது. மாலை 5 மணி வரை மருந்து விநியோகிக்கப்படும் என கூறப்பட்ட நிலையில் 5 மணிக்குப் பிறகும் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர். அவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் வற்புறுத்தியதால் வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Chennai corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe