சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில், கள் இறக்க அனுமதி வழங்கக்கோரி பேரணியாகச் சென்றனர். அதில் கலந்துகொண்ட அத்தொழிலை சார்ந்தோர், கள் இறக்குவதற்கான அனுமதியில் இருக்கும் தடையை நீக்கக் கோரியும், அதனை நம்பி இருப்பவர்களுக்கு ஆதரவு அளிக்கவும் வேண்டி கள் இறக்கும் உபகரணங்களோடு சாலையில் பேரணியாக சென்றனர்.
அப்போது ‘கள் ஒரு தாய்ப்பால். டாஸ்மாக் மது ஒரு புட்டிப்பால்’, ‘சட்டத்திற்குப் புறம்பாக கள் தடை ஏன்?’ என்பன போன்ற பதாதைகளுடன் பேரணியாகச் சென்றது குறிப்பிடத்தக்கது.