குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து நாடுமுழுவதும் தொடர் போராட்டங்கள் நடந்துவருகின்றன. தமிழகத்திலும், குறிப்பாக சென்னையிலும் பல்வேறு அரசியல் கட்சியினரும், சமூகநல அமைப்பினரும் போராடி வருகின்றனர். அந்த வகையில் நேற்றைய தினம் ஏராளமான இஸ்லாமியர்களும் பொதுமக்களும் கலந்துகொண்ட கண்டன ஆர்பாட்டம் சென்னை அயனாவரம் பகுதியில் நடைபெற்றது. போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.