dmk alliance

Advertisment

தமிழ்நாட்டில் 6 நாடாளுமன்ற மாநிலங்களை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூன் 24 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் ஜூன் 19 ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதனையொட்டி திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தங்கள் கூட்டணி வேட்பாளர்களை அறிவித்திருந்தது.

திமுக சார்பில் வில்சன், சல்மா, சிவலிங்கம் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் போட்டியிட இருக்கின்றனர். அதேபோல் அதிமுக கூட்டணியில்இன்பதுரை, தனபால் என அதிமு வேட்பாளர்களே போட்டியிட இருக்கின்றனர்.

இந்நிலையில் சட்டப்பேரவை கூடுதல் செயலாளர் சுப்பிரமணியன் முன்னிலையில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வில்சன், சல்மா, சிவலிங்கம் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர். இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.