மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

தமிழகத்தில் காலியாகும் ஆறு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு மார்ச் 26- ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகிய மூவரும் சட்டப்பேரவை வளாகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சட்டப்பேரவை செயலாளரும், தேர்தல் அதிகாரியுமான சீனிவாசனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

rajya sabha election admk candidates nomination filled

Advertisment

Advertisment

வேட்பு மனு தாக்கலின் போது காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழுத்தலைவர் ராமசாமி, திமுகவின் முக்கிய நிர்வாகிகளான டி,ஆர்,பாலு எம்.பி, துரைமுருகன், சேகர் பாபு, ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, பொன்முடி ஆகியோர் உடனிருந்தனர்.