தேமுதிக தலைவர் விஜயகாந்தை சாலிகிராமத்திலுள்ளஅவரது இல்லத்திற்கு சென்று சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த். இந்த சந்திப்பிற்கு பிறகு பேசிய ரஜினி, இவ்வாறு கூறினார்...
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9350773771" data-ad-format="auto" data-full-width-responsive="true">
விஜயகாந்த், அவரின்உடல்நலம் விசாரிக்க வந்தேன். நான் அவர் அமெரிக்க மருத்துவமனையில் இருக்கும்போதே சந்திக்க முயற்சி செய்தேன். அங்கே அது முடியவில்லை. நான் ராமச்சந்திரா மருத்துவமனையில் உடல்நலம் சரியில்லாமல் இருந்தபோது என்னைப் பார்க்கவந்த முதல் ஆள் கேப்டன்தான். நான் சிங்கப்பூரிலிருந்து வந்தபிறகும்கூட, தொலைபேசியில் முதலில் பேசி உடலைப் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொன்னவரும் அவர்தான்.அவர் இப்போ அமெரிக்கா போய்விட்டுநல்ல ஆரோக்கியத்துடன் வந்திருக்காங்க. அவரை சந்தித்ததில் சந்தோஷமாகஇருக்கு, ரொம்ப ஆரோக்கியமாக இருக்காங்க. அவர் நல்ல மனிதர், அவர் எப்போதும் நல்லா இருக்கணும்னு நான் ஆண்டவனை வேண்டிக்கிறேன்.இந்த சந்திப்பில் துளியும் அரசியல் இல்லை.