Advertisment

நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் அவசர ஆலோசனை

r

Advertisment

’தர்பார்’திரைப்படம் நேற்று வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், சென்னையில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தி இருக்கிறார். முக்கிய நிர்வாகிகள் மட்டுமே இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். வழக்கமாக இங்கு ரசிகர்களையும், மக்கள் மன்றத்தினரை சந்திக்கும் ரஜினி, கட்சி தொடங்குவதற்கான பணி குறித்து இன்று பேசியதாக சொல்கிறார்கள். அதே நேரத்தில் தர்பார் படத்தை இன்னும் வெற்றிகரமாக ஓட வைப்பதற்காக ரசிகர் மன்ற நிர்வாகிகளூடன் ஆலோசித்திருப்பார் என்றும் கூறப்படுகிறது.

’ரஜினிகாந்த் இப்போது தமிழராகவே மாறிவிட்டார். எனவே தமிழ்நாட்டு மக்களுக்காக அவர் பணிபுரிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். எப்போதும் வலியுறுத்தி வருகிறேன். அவர் நிச்சயம் தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்வார். அதற்கான சரியான முடிவையும் எடுப்பார்’என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நேற்று பேசியிருக்கு நிலையில் ரஜினிகாந்தின் இந்த அவசர சந்திப்பு அரசியல் நோக்கம் கொண்டதாகவே இருக்கும் என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில்.

rajinikanth
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe