ஆரம்பத்தில் இருந்தே அரசியலில் தீவிரமாக பேசப்பட்டு வந்த ரஜினிகாந்த் இன்றுவரை கட்சி ஆரம்பிக்கவில்லை. ஆனால், ஆரம்பத்திலிருந்தே அரசியலுக்கு வரமாட்டேன் என்று சொல்லிவந்த கமல்ஹாசன் திடீரென அரசியலில் இறங்கி கட்சி ஆரம்பித்துவிட்டார். இந்நிலையில் இவ்விருவரையும் குறித்து மதுரையில் நடிகர் ராதாரவி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
’’ரஜினி நல்ல மனிதர்;கமல் நன்றாக நடிக்கிறார். நடிகர்கள் எல்லாரும் கருப்பு மற்றும் வெள்ளையில்தான் சம்பளம் வாங்குகிறோம். கமல் ஊழல் செய்யாமல் அரசியலுக்கு வந்தால் நாட்டுக்கு நல்லதுதான். கமல் அரசியலுக்கு வந்து பரிசுத்த ஆவியாக இருந்தால் நாட்டுக்கு நன்மை’’என்று தெரிவித்துள்ளார்.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)