Advertisment

ரஜினிக்கு பரிசளிக்க பாபா சிலையை கொண்டுவந்த குட்டி ரசிகைகள்..!

Rajni fans who brought Baba statue as a gift to Rajini ..!

Advertisment

நடிகர் ரஜினிகாந்த் நேற்று சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதற்காக அவரது ரசிகர்கள் பல்வேறு ஊர்களிலிருந்து சென்னை ராகவேந்திரா மண்டபத்தின் முன்பாகவும் அவரது போயஸ் கார்டன் வீட்டின் முன்பாகவும் குவிந்திருந்தனர்.

இதில் இரண்டு சிறுமிகள் கையில் ரஜினிக்கு பிடித்தமான மரத்தாலான பாபா சிலையையும், ரஜினி, கட்சி தொடங்குவதாக முதலில் அறிவித்த நாளன்று அவர் வெளியிட்ட பாபா முத்திரை சிலையையும் கொண்டுவந்திருந்தனர்.

அவர்களிடம் பேசியபோது, அவர்கள் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியில் இருந்து வந்திருப்பதாகவும், ரஜினியின் தீவிரமான ரசிகர்கள் நாங்கள் என்றும் தெரிவித்தனர். மேலும் அவருக்கு பிடித்தமான பாபா சிலையையும், பாபா முத்திரை சிலையையும் அவருக்கு பரிசளிப்பதற்காக கொண்டுவந்துள்ளோம் என்றும் தெரிவித்தனர்.

rajnikanth rajini rajni
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe