ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதி ராபர்ட் பயாஸ்
விடுதலை கோரிய வழக்கு

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள். ஏ.செல்வம், பொன்.கலையரசன் ஆகியோர் முன்பு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே, இந்த வழக்கில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்தது. வழக்கு நீதிபதிகள் ஏ.செல்வம், பொன்.கலையரசன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 2012ல் தயாரிக்கப்பட்ட ஒரு மனுவை 5 ஆண்டுகள் கழித்து தமிழக அரசு தாக்கல் செய்தது. அதில், ராபர்ட் பயாஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோரை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது என்று கூறப்பட்டிருந்தது. இந்த பதில் மனு மக்கள் மத்தியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் ராஜீவ் சக்தேர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், விசாரணையை வரும் நவம்பர் 7ம் தேதிக்கு தள்ளிவைத்தது.