rahul gandhi

சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் மாணவிகள் மத்தியில் ‘சேஞ்ச் மேக்கர்ஸ்’ என்ற தலைப்பில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உரையாடி வருகிறார்.

Advertisment

இதில் மாணவிகள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வரும் அவர், பெண்கள் சம உரிமை குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், "வட இந்தியாவை ஒப்பிடும் போது தென் இந்தியாவில் பெண்கள் உரிமையும், பாதுகாப்பும் அதிகமாகவே உள்ளது. உத்தரபிரதேசம், பீகார் உள்ளிட்ட வட இந்திய பெண்கள் அதிகளவு பாதிக்கப்படுகின்றனர்" எனக் கூறினார். இதுபோல மாணவிகள் கேட்ட பல கேள்விகளுக்கு, சளைக்காமல் அனைத்து கேள்விகளுக்கு பதிலளித்தார்.

Advertisment

இந்நிலையில், கல்லூரி நிர்வாகம் சார்பில் ராகுல் காந்திக்கு, அவருடைய தந்தை ராஜீவ் காந்தியுடன் ராகுல் காந்தி இருக்கும் பெயிண்டிங்கை பரிசாக அளித்து கௌரவப்படுத்தியது.