Advertisment

கரோனா குறித்து ரஜினி வெளியிட்ட வீடியோ நீக்கம்

இந்தியாவில்கரோனாதடுப்பு நடவடிக்கை காரணமாக நாளை சுய ஊரடங்கு உத்தரவை பின்பற்ற வேண்டும் என பிரதமர் மோடி அறிவித்திருந்த நிலையில், இன்று ரஜினிகாந்த் ட்விட்டரில் கரோனாபாதிப்பு மற்றும் பிரதமர் அறிவித்த சுய ஊரடங்கு உத்தரவு பற்றிவீடியோ ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ தற்பொழுது ட்விட்டரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

Advertisment

 Rajini's video on Corona has been deleted from twitter

அந்த வீடியோவில் "கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா இரண்டாவது நிலையில் உள்ளது. அது மூன்றாவது நிலைக்கு போய்விடக்கூடாது. வெளியில் இருக்கும் கரோனா வைரஸ் 12ல் இருந்து 14 மணி நேரம் பரவாமல் இருந்தாலே, நாடு மூன்றாம் நிலைக்கு செல்வதை தடுத்து நிறுத்திவிடலாம். அதற்காகத்தான் பிரதமர் மோடி நாளை சுய ஊரடங்கு உத்தரவு கொடுத்துள்ளார். கரோனா பரவுதலை தடுக்க பிரதமர் மோடி கூறியபடி நாளை வீட்டிலேயே மக்கள் இருக்க வேண்டும். சுயஊரடங்கின்போது பொதுமக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும்" என்றுவேண்டுகோள் விடுத்திருந்தார் ரஜினிகாந்த்.

இந்நிலையில்வெளியிடப்பட்ட வீடியோதங்களது விதிமுறைகளுக்கு எதிரானது எனக்கூறி ட்விட்டர் நிறுவனம் ரஜினிகாந்த்வெளியிட்ட வீடியோவை நீக்கியுள்ளது.

corona virus rajinikanth twitter
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe