Skip to main content

ரஜினியின் அரசியல் முடிவு... பூத் கமிட்டி வேலையைப் பாதியில் விட்டுச்சென்ற மன்ற நிர்வாகிகள்!

Published on 29/12/2020 | Edited on 29/12/2020

 

Rajini's political decision ... The Rajini Forum executives who were setting up the booth committee went back in half

 

நடிகர் ரஜினிகாந்த் டிசம்பர் இறுதிநாட்களில் அரசியல் கட்சித் தொடங்குகிறார் என்று பரபரப்பான தகவல்கள் பரவிக் கொண்டிருந்த நேரத்தில், அவரது கட்சிப் பெயர் குறித்த யூகங்களும் வெளியாகின.

 

கட்சி தொடங்கும் முன்பே அதற்கான நிர்வாகிகளையும் நியமித்திருந்தார் ரஜினிகாந்த. இதனால், தமிழகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் பல வருட கனவு நிறைவேறப் போகிறது என்ற மகிழ்ச்சியில் இருந்தனர். இந்நிலையில், 'அண்ணாத்த' படப்பிடிப்பு நடைபெற்ற இடத்தில், பலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இந்நிலையில், ரஜினிக்கு சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். கட்சித் தொடங்க சில நாட்களே உள்ளதால், அவரது ரசிகர் மன்ற நிரவாகிகள், வேகமாக பூத் கமிட்டிகளை அமைத்துக் கொண்டிருந்தனர்.

 

அதேபோல, இன்று (29.12.2020) புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியத்தில் மாவட்ட நிர்வாகி தமிழ்ச்செல்வன், ஒன்றியச் செயலாளர் தங்கராசு ஆகியோர் ஆலங்குடி, வெல்லாகுளம் பகுதியில், பூத் கமிட்டி அமைப்பது குறித்து மன்ற கிளை நிர்வாகிகளிடம் படிவங்களைக் கொடுத்து பெற்றுக்கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் ரஜினி கட்சித் தொடங்கவில்லை என்ற அறிவிப்பு வெளியானதால், பாதியில் திரும்பியுள்ளனர்.

 

Rajini's political decision ... The Rajini Forum executives who were setting up the booth committee went back in half

 

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, "தொடக்கத்தில் 120 பூத்களுக்கு கமிட்டி அமைத்துவிட்டோம். இப்போது, ஒரு பூத்துக்கு, 15 பேர் கொண்ட கமிட்டி அமைக்கச் சொன்னதால், ஒன்றியம் முழுவதும் அதற்கான படிவங்களைக் கொடுத்து வாங்கிக் கொண்டிருந்தோம். இந்நிலையில், ரஜினிகாந்தின் அறிவிப்பு வெளியானதால், பாதியிலேயே திரும்பிவிட்டோம். இத்தனை வருடங்கள் காத்திருந்தோம். ஏமாற்றமாகத் தான் உள்ளது. அரசியல் கட்சித் தொடங்குவார் என்று கடன்வாங்கி மன்றங்களுக்குச் செலவுகள் செய்திருக்கிறோம்" என்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜனநாயக கடமையாற்றினார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Actor Rajinikanth cast his vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.  அதன்படி நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

Next Story

வாழைமரம் தோரணங்களோடு தயாரான மாதிரி வாக்குப் பதிவு மையம்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Voting registration center ready with banana trees

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி(நாளை) தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்புரை பரபரப்புகள் அடங்கியுள்ள நிலையில் ஆங்காங்கே வாக்குச் சாவடிகள் தயாராகிவிட்டது. மாதிரி வாக்குச் சாவடி என்று ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் சில வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

Voting registration center ready with banana trees

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் ஒரு வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து மாதிரி வாக்குச் சாவடியாக அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப் சாவடிக்கு முன்பு வாழை மரம், தோரணங்கள் கட்டி வாசலில் வண்ணக் கோலமிட்டு பூ, பழம் தாம்பூலம் தட்டுடன் இனிப்பு வழங்கி வாக்குப் பதிவுக்கு வரும் வாக்காளர்களை வரவேற்று வாக்குப் பதிவுக்கு அனுப்பும் வண்ணம், வாக்குப் பதிவு மையத்திற்குள் விழா கூடம் போல அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்பாடுகளை கீரமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் செய்துள்ளனர்.