Advertisment

“திராவிட இயக்கத்தின் கடைசி காலம்...” ரஜினி சகோதரர் சத்தியநாராயணன்!

Rajini's brother Satyanarayanan visit thiruvannamalai temple

புகழ்பெற்ற அண்ணாமலையார் திருக்கோயில் அய்யன்குளக் கரையில் அமைந்துள்ள அருள்மிகு அருணகிரி நாதர் திருக்கோயிலில், நடிகர் ரஜினிகாந்த்தின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு, ‘மிருத்தியஞ்ஜெய’ ஹோமத்தை ரஜினியின் அண்ணன் சத்யநாராயணன் ஏற்பாட்டில், 10 சிவாச்சாரியார்கள் நடத்தினர். அதோடு அருணகிரி நாதருக்கு அபிஷேக ஆராதனையும் நடத்தினார் சத்யநாராயணன். இதில் நேரடியாகக் கலந்துகொண்டார் சத்தியநாராயணன்.

Advertisment

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சத்தியநாராயணன், “திராவிடக் கட்சியினர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள். அவர்களின் கடைசிக் காலமிது. ரஜினி ரசிகர் மன்றத்தில் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்கு மாநில அளவிலான பதவிகள் வழங்கப்படும். கட்சியைப் பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கட்சியைப் பதிவு செய்வதற்கு, தேர்தல் ஆணையம் இன்னும் அனுமதி தரவில்லை. அனுமதி கிடைத்ததும், கட்சிபதிவு செய்யப்படும். பல்வேறு கட்சியைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் கட்சியில் இணைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. விமர்சனங்கள் செய்யும் அரசியல் கட்சியினருக்கு, ரஜினிகாந்த் ஜனவரியில் பதிலடி கொடுப்பார்” எனத் தெரிவித்தார்.

Advertisment

மேலும், தொடர்ந்த அவர், “ரஜினியின் தம்பிகள் அவருடன் இருக்கிறார்கள். தமிழ் நாட்டில் ரஜினியால் மாற்றத்தைக் கொண்டு வரமுடியும் என்று ரஜினியின் தம்பிகளும் தாய்மார்களும் பொதுமக்களும் கூறுகின்றனர்.

தி.மு.க., அ.தி.மு.கஆட்சிகளை மாற்றிவிட்டு, மக்கள் நல்லாட்சியைக் கொண்டு வர வேண்டும். லஞ்சம் ஒழிய வேண்டும். தமிழகத்தில் கல்வியை வளர்க்க வேண்டும். தமிழகத்தில் படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி உள்ளார்கள். ரஜினியின் புதிய ஆட்சி தொழிற்சாலைகளை அதிக அளவில் கொண்டுவரும். படித்த இளைஞர்கள் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு தேடிச் செல்கின்றனர். அவர்கள் மீண்டும் இந்தியாவிற்கு வருவார்கள். அந்த நிலை உருவாகும். ரஜினி ஆட்சிக்கு வந்தால் இந்த மாற்றங்கள் கண்டிப்பாக வரும்.

ரஜினியின் எண்ணங்கள் நல்ல எண்ணங்கள், வேறு எண்ணங்கள் இல்லை. ரஜினி கட்சி ஆரம்பிப்பது நன்றாக இருக்கும் நல்லதே நடக்கும். கட்சியில் ரஜினியின் ரசிகர்களுக்கு அதிக வாய்ப்புகள் கொடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

rajnikanth rajni
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe