''ரஜினியின் ஆசீர்வாதம் மட்டும் போதும், மாற்றத்தின் சேவகனாக விரைவில் வருவேன்'' - அர்ஜுன மூர்த்தி

ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதாக தெரிவித்திருந்த சமயத்தில்,பாஜகவின்அறிவுசார்பிரிவின்மாநிலத் தலைவர் பதவியிலிருந்து விலகிஅறிவிக்கப்படாத ரஜினிகாந்தின் கட்சிக்குத் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தவர் அர்ஜுனமூர்த்தி. அதன்பின் ரஜினி தனதுஅரசியல் நிலைப்பாட்டில் எடுத்த முடிவு அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் தற்பொழுது அர்ஜுனமூர்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், ‘ரஜினியின் ஆசீர்வாதம் மட்டும் போதும் மாற்றத்தின் சேவகனாக விரைவில் வருவேன். ரஜினிகாந்தின் ஆசையைநாம் நிறைவேற்றுவோம். ரஜினியின் நல்ல எண்ணம், நல்ல மனது,தமிழகத்தின் மீது கொண்ட அக்கறை நிறைவேறும் எனநம்புங்கள். ரஜினிகாந்த் எனது தலைவர் என்பதைவிட நானும்ஒரு ரஜினிரசிகர் என்பதில்பெருமைகொள்கிறேன். ரசிகன் என்ற அக்கறையில் ரஜினியின் புகழுக்கு எந்தவிதகெட்ட பெயரும் ஏற்படுத்தமாட்டோம்’ எனக் கூறியுள்ளார்.

Arjuna Murthy rajinikanth
இதையும் படியுங்கள்
Subscribe