/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rajini_54.jpg)
ரசிகர் மன்ற நிர்வாகிகள், மக்கள் மன்ற நிர்வாகிகளக்கு ரஜினிகாந்த் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், ரசிகர் மன்றத்தில் நீண்ட காலம் பொறுப்பில் இருப்பதாலேயே மக்கள் மன்றத்தில் பதவி வழங்க முடியாது. பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் யாரும் ரஜினி மக்கள் மன்றத்திற்கு வர வேண்டாம். குடும்பத்தை பராமரிக்காமல், மன்ற பணிகளுக்கு வருபவர்களை வரவேற்க மாட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ரஜினி மக்கள் மன்றப் பணிகளுக்கு யாரையும் நான் செலவு செய்ய கூறவில்ல. சமூக ஊடகங்களில் அவதூறு பரப்புபவர்கள் பற்றி கவலைப்பட வேண்டாம். ரசிகர் மன்றத்தை மட்டுமே வைத்து அரசியலில் சாதித்து விட முடியாது. எனது ஒப்புதலுடன்தான் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rajinigath 001.jpg)
Follow Us