‘மாபெரும் வெற்றிபெற்ற திமுக தலைவர்....’-ரஜினிகாந்த்

மக்களவை தேர்தலில் பாஜக பெரும்பான்மையான இடங்களை பிடித்துள்ளது. இதையடுத்து உலகநாடுகள் மோடிக்கு வாழ்த்து சொல்லி வருகின்றது.

rajinikanth

நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘’மதிப்பிற்குரிய நரேந்திரமோடிக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள். சாதித்துவிட்டீர்கள்.... கடவுள் ஆசீர்வதிக்கட்டும்’’என்று மோடிக்கு தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தமிழகத்தில் அதிக தொகுதிகளில் வெற்றிபெற்ற திமுகவும் ரஜினிகாந்த் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். “பாராளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற தி.மு.க தலைவர், மதிப்பிற்குரிய நண்பர் ஸ்டாலின் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.

rajinikanth stalin
இதையும் படியுங்கள்
Subscribe