Advertisment

ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை!

'Rajinikanth will return home in a few days' - Hospital report!

Advertisment

நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக, நேற்று (28/10/2021) சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவந்தனர். இருப்பினும், அவரது உடல்நலம் குறித்து அதிகாரபூர்வ தகவலுக்கு அவரது ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை நிர்வாகம் இன்று (29/10/2021) மதியம் 02.30 மணிக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், "நடிகர் ரஜினிகாந்த் குணமடைந்து வருகிறார். ரத்த ஓட்டத்தைச் சீரமைப்பதற்கான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. இன்னும் சில நாட்களில் நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்" என தெரிவித்துள்ளது.

Actor Rajinikanth kauvery hospital
இதையும் படியுங்கள்
Subscribe