rajini

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

குன்றத்தூரில் பெற்ற தாயால் 2 குழந்தைகள்பாலில் விஷம் வைத்து கொல்லப்பட்டசம்பவத்தில் குழந்தைகளை இழந்து வாடும் குழந்தைகளின் தந்தையான விஜயைநடிகர் ரஜினிகாந்த் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

Advertisment

சென்னை குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளையில் வசித்து வந்தவர்ள் விஜயகுமார் - அபிராமி தம்பதியினர். இவர்களுக்கு 7 வயதில் அஜய் என்ற மகனும், 4 வயதில் கார்னிகா என்ற மகளும் இருந்தனர். கடந்த இரண்டு மாதங்களாக பிரியாணி கடை ஊழியர் சுந்தரம் என்பவருடன் ஏற்பட்ட கூடா நட்பு காரணமாக, கணவன் மற்றும் இரண்டு குழந்தைகளை கொல்லதிட்டமிட்டு பாலில் விஷம் கலந்து கொடுத்துள்ளார் அபிராமி. அதில் குழந்தைகள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தன. கணவன் விஜய் தப்பினார். குழந்தைகளை கொன்று தப்பிய அபிராமி நாகர்கோவிலில் கைது செய்யப்பட்டார். கொலை செய்ய ஆலோசனை சொன்ன சுந்தரமும் கைது செய்யப்பட்டார்.இந்த சம்பவம்பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்

இரண்டு குழந்தைகளையும் பரிகொடுத்த தந்தைவிஜய்ரஜினிரசிகர் மேலும்அவரின் குழந்தைகளும் ரஜினிகாந்த்போல பேசும், சைகை காமிக்கும். அதுதொடர்பானஅந்த இளந்தளிர்களின் படங்களும் வீடியோவும் பகிரப்பட்டன. இதனைத்தொடர்ந்து இன்று விஜயை ரஜினிகாந்த் அழைத்து நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார், எந்த ஆறுதலும் இந்த மிக கொடிய நிலைமைக்கு மருந்தாகாது என்ற நிலையில் இருந்தாலும் ரஜினியை கண்டவுடன் உடைந்து கதறி அழுதுருக்கிறார் விஜய். மீண்டு வாருங்கள் விஜய். ஆண்டவன் துணை இருப்பான்.. வேறென்ன சொல்ல என ஆறுதல் சொல்லி வழியனுப்பி வைத்துள்ளார் ரஜினிகாந்த்.