இலங்கையில் தொடர்ச்சியாக 8 இடங்களில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் மொத்தம் 207 பேர் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவம் தெடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சர் ருவன் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 8 இடங்களில் நடந்த அடுத்தடுத்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பலர் தங்கள் கண்டனங்களை தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வருத்தம் தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் ''ஈஸ்டர் திருநாளான இன்று இலங்கையில் நடந்த இந்த துயரத்தில் பாதிக்கபட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை'' எனக்கூறியுள்ளார்.
ஈஸ்டர் திருநாளான இன்று இலங்கையில் நடந்த இந்த துயரத்தில் பாதிக்கபட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை.
— Rajinikanth (@rajinikanth) April 21, 2019