Advertisment

பிரதமர், முதல்வருக்கு ரஜினிகாந்த் நன்றி!

Rajinikanth thanks to Prime Minister, Chief Minister!

நடிகர் ரஜினிகாந்தின் 70- வது பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்கள் மற்றும் ரஜினி மக்கள் மன்றத்தினர் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்துக்கு சமூக வலைத்தளங்களில் அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர் உள்ளிட்ட பலரும் வாழ்த்துத் தெரிவித்திருந்த நிலையில், பிறந்தநாளுக்கு வாழ்த்துத் தெரிவித்த பிரதமர், முதல்வருக்கு ரஜினிகாந்த் ட்விட்டரில்நன்றி தெரிவித்துள்ளார்.

Advertisment

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், "ரஜினிகாந்த் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ எனது உளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுருந்தார்.அதேபோல், தி.மு.கதலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "அன்பும் பாசமும் கொண்ட இனிய நண்பர் ரஜினிகாந்துக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! 71 ஆவது பிறந்தநாள் கொண்டாடும் தாங்கள் நலமுடன் நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன்! நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களைத் தொலைப்பேசியில் அழைத்து எனது வாழ்த்தினைத் தெரிவித்தேன்!" எனக் குறிப்பிட்டுருந்தார். அதேபோல், துணை முதல்வர் ஓ.பி.எஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்திருந்தனர். அவரது ரசிகர்களும் அவரது பிறந்தநாளை விமர்சையாகக் கொண்டாடி வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் தனதுபிறந்தநாளுக்கு வாழ்த்துத் தெரிவித்த பிரதமர், முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் என அனைவருக்கும் ட்விட்டரில்நன்றி தெரிவித்துள்ள ரஜினிகாந்த், உற்சாகத்துடன் எனது பிறந்தநாளைக் கொண்டாடிவரும் எனது ரசிகர்களுக்கும் என்மனமார்ந்த நன்றி எனத்தெரிவித்துள்ளார்.

birthday rajinikanth
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe