
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் மெயின் பஜாரில் காமராஜர் சிலை அருகே செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் (வயது 55), அவருடைய மகன் பென்னிக்ஸ்(31) ஆகியோர் சாத்தான்குளம் காவல்துறையினரால் பொதுமுடக்க விதிகளை மீறி கடைகளைத் திறந்ததாகக்கூறி விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். விசாரணையைத் தொடர்ந்துஇருவரும் உயிரிழந்தசம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.இந்தச் சம்பவத்திற்கு திரையுலகினர், விளையாட்டு பிரபலங்கள் உட்பட பல்வேறு தரப்புகளில் இருந்து கண்டன குரல்கள் எழுந்து வருகிறது.
இந்நிலையில் சாத்தான்குளத்தில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ்ஆகியோரின் குடும்பத்தினரை நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது இரங்கலைத் தெரிவித்ததாக, ரஜினிகாந்தின் ஆதரவாளரும், அவரின் நெருங்கிய நண்பருமான கராத்தே தியாகராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ரஜினிகாந்த் எந்தவித இரங்கலும்,கண்டனமும்தெரிவிக்காமல் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Follow Us